வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் பகுதியில் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு சரியாக இயங்காததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வருடங்களாக பிஎஸ்என்எல் சேவை சரிவர இயங்காததால் பொதுமக்களும் பள்ளி மாணவ-மாணவிகளும் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.
வால்பாறை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு உட்பட்ட சின்கோனா டிவிஷன் பகுதியில் உபாசி, சின்னக்கல்லார் பெரியகல்லாறு, சின்கோனா, ரயான் போன்ற பகுதிகள் உள்ளன இங்கே சுமார் 5-ஆயிரம் மேற்பட்ட தொழிலாளிகள் குடியிருந்து வருகின்றனர்.
இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளனர். மேலும் அப்பகுதியில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி இயக்கப்பட்டு வருகிறது. இரண்டு வருட காலமாக வால்பாறை பகுதியில் முக்கிய தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் சேவை மையம் ஆகும்.
பிஎஸ்என்எல் சேவை மைய அலுவலகத்தில் பணியாளர்கள் இல்லாததால் நெட்வொர்க் துண்டிக்கப்பட்டால் சரி செய்ய அலுவலகர் இல்லாமல் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.
மேலும் சின்கோனா எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புகள் வந்தால் வனத்துறையை அழைப்பதற்காகத் தொலைத்தொடர்பு செயல்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் யானைகளை விரட்ட முடியாமலும் யானைகளின் வருகிற தகவலை வனத்துறையினர் மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தவும், இயலாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் அங்குள்ள பள்ளி மாணவ -மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கு பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது என்று அப்பகுதியில் வாழும் ராஜேந்திரன் என்பவர் தெரிவிக்கிறார்.
இதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு வால்பாறை பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு பிஎஸ்என்எல் சேவை மையத்தை நன்கு சீரமைத்துத் தரவும் கூடுதலான பணியாளர்களை அமர்த்தி பிஎஸ்என்எல் சேவை அலுவலகத்தில் முறையாக நடை பெறும்வகையில் பண்ணித் தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.