வால்பாறையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15-நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
வால்பாறை: வால்பாறையில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற நபரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோராக நடைபெறுவதாக காவல்துறைக்குப் புகார் வந்துள்ளது. இதனையடுத்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் காவலர்கள் வால்பாறையில் பல்வேறு இடங்களில் சோதனைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் வால்பாறையை அடுத்துள்ளது குரங்கு முடி தேயிலைத் தோட்டம். இப்பகுதியில் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு மது விற்பனை செய்யப் படுவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் மற்றும் உதவி ஆய்வாளர் இளங்கோ குரங்கு முடி தேயிலைத் தோட்டத்திற்குச் சென்று ராஜாமணி என்பவரின் வீட்டைச் சோதனையிட்டனர்.
அங்கு கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப் பட்டிருந்த ஐம்பத்தி ஐந்து மதுபாட்டில்களை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ராஜாமணியை வால்பாறை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து காவல்துறையினர் ராஜமணியை வால்பாறை நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர்.
நீதிபதி உத்தரவின் பேரில் 15-நாள் நீதிமன்றக் காவலுக்கு ராஜாமணி அனுப்பி வைக்கப்பட்டார்.