இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த வலியுறுத்தி கோஷமிட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பெட்ரோல் டீசல், விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மோகன் தலைமை வகித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.
இதில் வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மோகன், பெரியசாமி, மாணிக்கம், வழக்கறிஞர் விசுவநாதன், அற்புத மணி, ஜீவா லட்சுமி உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.