புகாரின் பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் பேருந்தில் சென்ற பெண்களிடம் 7 பவுன் நகை மற்றும் ரூ. 15 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சத்ய நாராயண புரம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மனைவி மாணிக்கம் (59). இவர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று காலை டவுன்ஹாலில் இருந்து சாய்பாபா காலனிக்கு தனியார் பேருந்து மூலம் வேலைக்குப் புறப்பட்டு சென்றார். பேருந்தில் கூட்டம் அதிகம் இருந்ததால் இவருக்கு உட்கார இடம் கிடைக்கவில்லை.
இதனால் மாணிக்கம் தனது கைப்பையை பேருந்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் கொடுத்தார். பின்னர் சாய்பாபா காலனி பஸ் ஸ்டாப் வந்த பொழுது கைப்பையை வாங்கிக்கொண்டு கீழே இறங்கினார். பையை திறந்து பார்த்த பொழுது 15 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மாணிக்கம் சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சிறுமுகை பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவரின் மனைவி வள்ளியம்மாள் (68). இவர் நேற்று சரவணம்பட்டியில் இருந்து காளப்பட்டிக்கு பஸ் மூலம் சென்று கொண்டிருந்தார். பேருந்தில் இருந்து இறங்கிய பொழுது கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச் செயின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, வள்ளியம்மாள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.