தலை தீபாவளி கொண்டாடும் 4வது பட்டாலியனைச் சேர்ந்த கோவை சிறப்புக் காவல் படை போலீசாருக்கு இனிப்பு, பட்டாசுடன் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் நாலாவது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை செயல்பட்டு வருகிறது.
அங்கு பணி புரியக்கூடிய காவலர்களில் தலை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு 5 நாட்கள் விடுமுறை அளித்து அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து கமாண்டன்ட் அங்கு பணிபுரியும் அனைத்து போலீசாருக்கும் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கோவைப்புதூரில் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை நான்காம் அணியில் பணிபுரியும் அனைத்து போலீசார்குடும்பங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். தலை தீபாவளி கொண்டாட இருக்கும் போலீசாருக்கு நவம்பர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அளித்து தீபாவளி அன்பளிப்பாக 200 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள், 100 ரூபாய் மதிப்பிலான இனிப்பும் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், அன்பளிப்பை அந்தந்த குழும அலுவலகத்தில் அல்லது தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அந்த அணியின் தளவாய் என சொல்லப்படும் கமாண்டன்ட் நினைத்தால் அவர்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு தங்களுக்குக் கீழ் உள்ள நிதியின் வாயிலாக இவ்வாறு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.