ஆசிரியை அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த காட்டூர் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் மகனை பள்ளியில் சேர்க்க வந்ததாக கூறி, ஆசிரியையிடம், 10.5 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை வி.கே.கே.மேனன் ரோடு வெங்கிடசாமி லே-அவுட்டை சேர்ந்த பூண்டி என்பவரின் மனைவி அன்புக்கரசி (39). கோவை சின்னசாமி ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அன்புக்கரசி பள்ளியில் இருந்த போது, 30 வயது மதிப்புடைய வாலிபர் ஒருவர் அவரை சந்தித்து தன்னுடைய மகனை பள்ளியில் சேர்க்க கட்டணம், தேவையான ஆவணங்கள் குறித்து விசாரித்தார். அன்புக்கரசியும் தேவையான தகவல்களை அவருக்கு தெரிவித்தார்.
அப்போது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மிரட்டி அன்புக்கரசி அணிந்திருந்த, பத்தரை பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புக்கரசி சத்தமிட்டார்.
ஆனால், சக ஆசிரியர்கள் வருவதற்குள் அந்நபர் மாயமானார். அன்புக்கரசி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த காட்டூர் போலீசார் மர்மநபரை தேடி வருகின்றனர்.