கோவை மாநகராட்சியில் 1236 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை..!!

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாநகராட்சியில் 1,236 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தெருநாய்களைக் கட்டுப்படுத்த ஒண்டிப்புதூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள தெரு நாய்களுக்கான கருத்தடை மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், ஒண்டிப்புதூர் தெரு நாய்களுக்கான கருத்தடை மையம் நடப்பு அக்டோபர் மாதத்தில் துவங்கி செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் மட்டும் இதுவரை 145 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கருத்தடை அறுவை சிகிச்சை மையம் மூலமாக, நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில் 101 தெரு நாய்களுக்கும், மார்ச் மாதத்தில் 154 தெரு நாய்களுக்கும், ஏப்ரல் மாதத்தில் 140 தெரு நாய்களுக்கும், மே மாதத்தில் 146 தெரு நாய்களுக்கும், ஜூன் மாதத்தில் 144 தெரு நாய்களுக்கும், ஜூலை மாதத்தில் 119 தெரு நாய்களுக்கும், ஆகஸ்ட் மாதத்தில் 127 தெரு நாய்களுக்கும், செப்டம்பர் மாதத்தில் 153 தெரு நாய்களுக்கும், அக்டோபர் மாதத்தில் 152 தெரு நாய்களுக்கும் என மொத்தமாக 1236 தெரு நாய்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

'கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக நாய்களுக்குக் கருத்தடை பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு உரிய கட்டணத்தை மாநகராட்சி வழங்குகிறது' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...