தீபாவளி பண்டிகை: கோவையில் மூன்று நாட்களுக்கு ரேஷன் கடைகள் இரவு 7 மணி வரை இயங்கும் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

நவம்பர் 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவ., 1ம் தேதி முதல் மூன்று நாட்கள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடும்ப அட்டைதாரர்கள் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், நவ., 1ம் தேதி முதல், 3ம் தேதி வரை காலை, 8:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை ரேஷன் கடைகளை திறந்து பொதுவினியோக திட்டம் மற்றும் சிறப்பு பொது வினியோக திட்ட பொருட்களை வழங்க தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளில், இத்தேதிகளில், இந்த நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்படும். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை வாங்க விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள் மட்டும், இந்த மூன்று நாட்களில் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அனைவருக்கும் கட்டாயம் இல்லை.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக பொருட்களை பெறாதவர்கள், வழக்கம்போல் பண்டிகை காலம் முடிந்து, 8ம் தேதி முதல் அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ளலாம். அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பும் குடும்ப அட்டைதாரர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்து, ஒரு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தும் பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...