கோவை கிணத்துக்கடவு அருகே சொலவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கணினி சிட்டா திருத்த சிறப்பு முகாமில் 18 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையம் தொடக்கப்பள்ளியில் கணினி சிட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
துணை ஆட்சியர் அம்சவேணி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் விவசாயிகளும், பொதுமக்களும் கணினி சிட்டாவிலுள்ள திருத்தங்கள் மற்றும் பட்டா பெயர் மாற்றம், நத்தம் பட்டா மாறுதல் போன்ற மனுக்களை வழங்கினர்.
சிறப்பு முகாமில் பெறப்பட்ட 58 மனுக்களில் 18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பொதுமக்களுக்கு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு முகாமில் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா, மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், வருவாய் ஆய்வாளர் லலிதா, சொலவம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்ராசு மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.