வால்பாறையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்தாய்வு வட்டாரக்கூட்டம்..!

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசை வலியுறுத்திடத் தீர்மானிக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்தாய்வு வட்டாரக்கூட்டம் MKS துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு வட்டார அமைப்பாளர் சுனில் லால் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் தலைமை தாங்கினர். பொள்ளாச்சி கல்வி மாவட்ட தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு இயக்க உரையாற்றினார். வட்டாரச் செயலாளர் முனீஸ்வரன் தொகுத்து வழங்கினார். வட்டாரத் தலைவர் ஜெயலட்சுமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் ராஜேந்திரன் நன்றியுரை கூறினார்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவும், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு விரைந்து நடத்தவும் தமிழக அரசை வலியுறுத்திட தீர்மானிக்கப்பட்டது.

2) 10, +2, DTE உண்மைத் தன்மை சான்று கிடைக்காத ஆசிரியப்பெருமக்களுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ளவும். கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இக்கலந்தாய்வு கூட்டத்தில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உருளிக்கல் யூடி விஜயலட்சுமி தலைவராகவும், முருகாளி முனீஸ்வரன் செயலாளராகவும், ராஜேந்திரன் நல்ல காத்து எஸ்டேட் பொருளாளராகவும், துணைத் தலைவர்களாக பச்சமலை வடக்கு அழகுராணி, காஞ்ச மலை பாலாஜி அருண் கணேஷ், சக்தி எஸ்டேட் ராமசுப்புவும், துணை செயலாளராக சோலையார் எஸ்டேட் சண்முகப் பிரியா, முடீஸ் மகேந்திரன், சிறுகுன்றா யூ டி மணிகண்டனும், செயற்குழு உறுப்பினர்களாக சதீஷ்குமார், பண்ணிமேடு ராபர்ட் நிக்சன், மானிக்கா என்.சி அஜித் குமார், தலநார், ராஜ்குமார், வால்பாறை உதயகுமார், ஊசிமலை மட்டம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...