கடந்த ஆகஸ்ட் 26ல் ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவை லஞ்ச வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமினில் வெளிவந்த ஏட்டு மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் கோவை கீரணத்தம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஏட்டாக பணிபுரிந்தார்.
கோவை போலீஸ் குவார்ட்டர்ஸில் குடியிருந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 26ல், ரூ. 2,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், லஞ்ச வழக்கில் கைதான ராஜ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, அவர் ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.