பொள்ளாச்சி அருகே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்து 4வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் விஷம் குடித்து தற்கொலை.

நீட் முடிவுகள் இன்னும் வாரத நிலையில், கடந்த சில நாட்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி இந்த முறையும் தோல்வியடைந்து  விடுவேனோ..? என மன வருத்தத்தில் இருந்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி அருகே3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்து 4வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் குப்புசாமி- வளர்மதி இவர்களது மகன் கீர்த்திவாசன் வயது (20). இவர் 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி, மூன்று முறையும் நீட்தேர்வில் தோல்வி அடைந்ததால், இம்முறை நான்காவது முறையாக நீட் தேர்வு எழுதி உள்ளார் .

அதன் முடிவுகள் இன்னும் வாரத நிலையில், கடந்த சில நாட்களாக கீர்த்திவாசன் நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாக கூறி இந்த முறையும் தோல்வியடைந்துவிடுவேனோ..? என மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு தனது தாயார் வளர்மதியிடம் தான் விஷம் குடித்ததாக கூறியுள்ளார்.

இதையடுத்து, கீர்த்திவாசனை மருத்துவ சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால்,செல்லும் வழியில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தற்போது மாணவன் கீர்த்திவாசன் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...