நீலகிரி உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 1-லட்சத்து 38-ஆயிரத்து 58-ரூபாய் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி: நீலகிரி உதகை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 1-லட்சத்து 38-ஆயிரத்து 58-ரூபாய் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனை விசாரித்து வருகின்றனர்.

பொதுவாகத் தீபாவளி மாதங்களில் வாகனம் சம்பந்தமான இடைத்தரகர்கள் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளுக்கு அதிக அளவில் பணம் கொடுப்பது வழக்கம், இதனை அறிந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கணக்கில் வராத 1-லட்சத்து 38-ஆயிரத்து 58-ரூபாய் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் குலோத்துங்கனிடம் விசாரணை மேற்கொண்டு அங்கிருந்த ஆவணங்களைக் கைப்பற்றினர்.