கோவை மத்திய மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா ஆய்வு.!!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகள்‌, நகர்நல மருத்துவமனை, மகளிர்‌ பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலத்திலுள்ள மாநகராட்சி பள்ளிகள்‌, நகர்நல மருத்துவமனை, மகளிர்‌ பூங்கா ஆகியவற்றை மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌, புலியகுளம்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும்‌ சுந்தரேசன்‌ லே-அவுட்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, பள்ளியின்‌ வகுப்பறைகள்‌, ஆய்வகங்கள்‌, மின்‌ வசதி, குடிநீர் வசதி,



கழிப்பறை வசதிகள்‌ ஆகியவற்றைக் குறித்து, பொறியாளர்களிடம்‌ கேட்டறிந்து பள்ளி வளாகம்‌, அங்குள்ள சிறு பூங்காவின்‌ உட்புற பகுதிகள்‌ மற்றும்‌ சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமெனவும்‌, பள்ளி வகுப்பறை மற்றும்‌ வளாகத்தில்‌ கொசுமருந்து அடித்தும்‌, குடிநீர்த்‌ தொட்டிகளைச் சுத்தம்‌ செய்யவேண்டுமெனவும்‌,



மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகள்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில்‌ தற்போது நடைபெற்று வரும்‌ தூய்மைப்பணிகளை விரைவாகச் செய்து முடிக்கவேண்டுமென ஆணையாளர்‌ அறிவுறுத்தினார்‌.



தொடர்ந்து, மத்திய மண்டலத்திலுள்ள நேரு நகர்‌ பகுதியிலுள்ள மகளிர்‌ பூங்காவில்‌ ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌, பூங்கா மற்றும்‌ உடற்பயிற்சிக்‌ கூடம்‌ ஆகியவற்றைத் தாய்மையாக வைத்திருக்க வேண்டுமென அறிவுறுத்திய பின்னர்‌ இராமநாதபுரம்‌ நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்‌,



மருத்துவமனைக்கு நாளொன்றுக்குச் சராசரியாக எவ்வளவு நோயாளிகள்‌ சிகிச்சை பெற வருகிறார்கள்‌? சிகிச்சைக்கு வருகை தரும்‌ நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்‌ முறைகள்‌ குறித்தும்‌, மருந்து, மாத்திரைகள்‌, போதுமான இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார்‌.



அதன்‌ பின்னர்‌, சுகாதார நிலைய வளாகத்தில்‌ ரூ.1.05-கோடி மதிப்பீட்டில்‌ புதிதாக நகர்நல மருத்துவமனை கட்டிடம்‌ கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர்‌,



73-வது வார்டுக்குட்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு அமைந்துள்ள பேருந்து நிலைய சாலையில்,‌ உள்ள மழைநீர்‌ வடிகால்‌ பழுதடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக பழுதுகளைச் சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையாளர்‌ சுந்தாராஜன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ சுகாதார ஆய்வாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...