திருப்பூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு.!!

திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முழு தொகை செலுத்திய 142- பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் முழு தொகை செலுத்திய 142- பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடு ஒதுக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் சார்பில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு உள்ளது.

இதில் வீடு இல்லா ஏழைகளுக்கும் நீர்நிலைப் பகுதிகளில் தங்கியுள்ளவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக நெருப்பெரிச்சல் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 45-திருநங்கைகளுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நெருப்பெரிச்சல் மற்றும் வீரபாண்டி பகுதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வீடுகளுக்கான முழு தொகை கட்டிய பயனாளிகளுக்கு வீடுகளை குலுக்கல் முறையில் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மாநகராட்சி துணை கமிஷனர் தலைமையில், நடந்த நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குலுக்கல் மூலம் வீடு வழங்கும் நிகழ்வில் 142- பயனாளிகள் கலந்து கொண்டு தங்களுக்கான வீட்டை தேர்வு செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...