கோவை கிணத்துக்கடவு அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம்..!

இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

வரும் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக, பள்ளிகள் திறப்பது குறித்து கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் வீதியிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 



தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 

இதில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் சக்தி சரண்யா கலந்துகொண்டு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். 

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் சுழற்சி முறையில் நடத்தப்படும் நேரடி வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி இருந்தால் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும், சத்தான, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும் போன்ற ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் கூறப்பட்டது. 

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...