பொள்ளாச்சியில் விதிமீறல்களால் வருவாய் இழப்பு: வாடகை கார் ஓட்டுனர்கள் குமுறல்.!!

பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிகளை மீறி செயல்படும் வாகனங்களால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை கார் ஓட்டுனர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தத்தை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

புகார் குறித்து வாடகை கார் உரிமையாளர்கள் கூறுகையில், பொள்ளாச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயங்கி வருகின்றன. கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாடகை கார்கள் திரும்பிச் செல்லும்போது மிக குறைந்த கட்டணத்தில் வாடகை எடுத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு வாடகை எடுக்கக் கூடாது என நீதிமன்றத்தில் தடையால் பெற்றுள்ள நிலையிலும் இந்த விதி மீறல் தொடர்கிறது. இதனால் இங்குள்ள வாடகை கார்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

வாடகை கார்களை இயக்க ஆண்டொன்றுக்கு டாக்ஸ், பர்மிட், எப்சி, இன்சூரன்ஸ் என சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. ஆனால் இங்கு பலர் செலவுகள் எதுவும் இன்றி சொந்த கார்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர்.

இதுபோன்ற விதிமீறல்களைத் தடுத்து எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். தவறும் பட்சத்தில் எங்களது கார்களை வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...