கோவை கிணத்துக்கடவு அருகே தீராத வயிற்று வலியால் விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை..!

கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே நெ.10 முத்தூரில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள நெ.10 முத்தூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (84), விவசாயியான இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 26ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த முத்துக்குமாரசாமி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து, வீட்டில் மயங்கிய நிலையில் இருந்த முத்துக்குமாரசாமியை மீட்டு அக்கம்பக்கத்தினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த முத்துக்குமாரசாமியின் மகன் ரவிக்குமார் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...