கிணத்துக்கடவில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை.!!

கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் மின்கம்பத்தில் தூக்குப் போட்டு வடமாநில தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதால், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே குருநெல்லிபாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான தொழிற்சாலையில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த கபிராஜ்(20) என்ற நபர் நேற்று காலை தொழிற்சாலையை விட்டு வெளியே சென்றவர். திரும்பாததால் தொழிற்சாலையில் பணியாற்றிய சக தொழிலாளர்கள் கபிராஜை தேடி வந்துள்ளனர்.

அப்போது தொழிற்சாலையில் பின்புறம் பகுதியிலுள்ள மின்கம்பத்தில் கபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் கபிராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...