கிணத்துக்கடவில் சாலையிலிருந்த பள்ளத்தில் நிலைத்தடுமாறி விழுந்த வேன் ஓட்டுநர் பலி.!!

கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கிணத்துக்கடவு TELC-பள்ளி முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் இருந்த பள்ளத்தில், இருசக்கரம் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறி கிழேவிழுந்த வேன் ஓட்டுநர் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன் வயது (53) கூலிவேலை செய்து வரும் இவருக்கு, பேபி (51) என்ற மனைவியும் கலைச்செல்வி என்ற மகளும், சிவக்குமார் (21) கெளரிசங்கர் (17) ஆகிய 2 மகன்களும் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு வேன் ஓட்டுநரான சிவகுமார் கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூரில் தனது தாத்தா நடராஜை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் காணியாலாம் பாளைத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது சர்வீஸ் சாலையில் நடுவே ஏற்பட்டிருந்த பள்ளத்தில் இருசக்கரம் வாகனம் இறங்கியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிவகுமாருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்குப் போராடினார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிவகுமாருக்கு முதலுதவி சிகிச்சையளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிவகுமாருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...