கோடநாடு வழக்கு நவம்பர் 26-க்கு ஒத்திவைப்பு.!!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 26-க்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார். மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை நவம்பர் 26-க்கு ஒத்தி வைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், இதுவரை 45-க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும் என அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் பேட்டி, இவ்வழக்கு விசாரணை நேர்மையாக, வெளிப்படையாகவும் நடைபெற்று வருவதாக .

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை எஸ்டேட் மற்றும் பங்களாவுக்குள் கடந்த 2017-ஏப்ரல் 23-ம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. பின்னர், பங்களாவுக்குள் சென்று பல்வேறு பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த கொள்ளை, கொலை சம்பவங்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாக சயான் மற்றும் கனகராஜ் ஆகியோரைக் காவல்துறையினர் சந்தேகித்தனர். இந்நிலையில், கனகராஜ் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10-பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் திருப்புமுனையாக காவல்துறையினர் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மறு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, சந்தோஷ் சாமி, சதீசன், பிஜின் குட்டி ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், கடந்த 25-ம் தேதி தனபால் மற்றும் ரமேஷை போலீஸார் கைது செய்தனர்.

நேற்று தனபாலை 5-நாட்கள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் போலீஸாருக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 



விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ் மற்றும் உதயகுமார் ஆஜராகியிருந்தனர்.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான், அரசு வழக்கறிஞர் ஆனந்த் ஆஜராகினர். விசாரணை தொடங்கியதும் அரசு வழக்கறிஞர்கள் மேல் விசாரணைக்கு நீண்ட தேவை என வலியுறுத்தினார்.

அதன் பேரில் நீதிபதி சஞ்சய் பாபா, வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 26-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும், தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் வழக்கை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறியதாவது: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 45க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ள நிலையில் இவ்வழக்கு விசாரணையில் தேவைப்பட்டால் கைது நடவடிக்கை இருக்கும். விசாரணைக்குக் கால அவகாசம் தேவை என கோரப்பட்டது.

இதனால், விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரமேஷை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இதனால், 5 நாட்கள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். தனபால் மற்றும் ரமேஷின் ஜாமீன் மனு மீதான விசாரணை நவம்பர் 2-ம் தேதி நடக்கும்.

வழக்கில், மின்னணு தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. செல்போன் ஆப்ரேட்டர்களிடம் விசாரணை நடத்த அவகாசம் தேவை. இவ்வாறு அவர் என்றார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...