கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த சாட்டிலைட் உதவியுடன் சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் 144 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டத்தில் கணியூர் முதல் உக்கடம் வரை 26 கி.மீ. தூரத்திற்கும், பிளிச்சி முதல் உக்கடம் வரை 24 கி.மீ. தூரத்திற்கும், கணேசபுரம், காருண்யா நகர் முதல் உக்கடம் வரை 44 கி.மீ. தூரத்திற்கும், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் முதல் உக்கடம் பேருந்து நிலையம் வரை 8 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ ரயில் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. மொத்தமாக 144 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கும் வகையில் சர்வே பணி நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அவினாசி சாலை வழிகள், பெரியகடை வீதி, உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சர்வே பணிகள் சாட்டிலைட் உதவியுடன் அண்மையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, கோவையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக சர்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கோவை நகரில் 136 கி.மீ. தூரம் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைக்காகத் திட்டம் தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இணைப்பு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சர்வே பணிகள் முடிந்ததும் முதல் கட்ட திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.