கோவை ஹோப்காலேஜ் சேரன்மாநகர் - விளாங்குறிச்சி சாலையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆய்வு..!

தற்போது இந்த சாலையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக முதல் கட்டமாக மோட்டோ ரோல் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

கோவை: கோவையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ஹோப்காலேஜ் சேரன்மாநகர், விளாங்குறிச்சி ரோட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆய்வு செய்தனர். 

ஹோப்காலேஜ் பகுதியிலிருந்து டைடல் பார்க் வழியாக சேரன்மாநகர் மற்றும் விளாங்குறிச்சி செல்லும் பிரதான ரோடு காஸ் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து மக்கள் பயணிக்கவே முடியாத அவல நிலையில் காட்சியளிக்கிறது. 

இந்த நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய தார்சாலை விரைவில் அமைக்கக் கோரி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் அவர்களும் இரண்டு முறை மாநகராட்சி ஆணையாளரை அணுகி மனு கொடுத்தனர்.



இதையடுத்து, தற்போது இந்த சாலையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக முதல் கட்டமாக மோட்டோ ரோல் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 



அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ரோட்டில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர். 



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...