கோவையில் தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்த இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்த பரிதாபம்..!

கோவை நொய்யல் ஆற்று மேட்டில் தங்கமண் இருப்பதாக ஆற்றில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவையில் தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்த இளைஞர் சேற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடிக் குடியிருப்பைச் சேர்ந்த குணா என்பவரது மகன் வல்லரசு (22) இவரும், அதே பகுதியைச் சேர்ந்த வல்லரசின் நண்பர் சேகர் என்பவரும், கோவை போத்தனூர் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இருந்து கோணவாய்க்கால் பாளையம் செல்லும் நொய்யல் ஆற்றுமேடு வழியாக இருசக்கர வாகனத்தில் நேற்றுமாலை சென்றுள்ளனர். 

கிடைக்கும் கூலிவேலை செய்துவரும் வல்லரசு நொய்யலாற்றில் வீடுகளில் இருந்து வெளியேரும் கழிவுநீர் மட்டுமின்றி பல்வேறு இடங்களில் இருந்தும் கழிவுநீர் இந்த நொய்யலாற்றில் கலந்து வருவதால், தங்கம் கலந்த மண் கிடைக்கும் என்று நண்பர் சேகரிடம் தெரிவித்து விட்டு ஆற்றில் குதித்துள்ளார். 

இதில் புதர் மண்டிகிடந்த சேற்றில் சிக்கிய வல்லரசை மீட்க முடியாமல், சேகர் கூச்சலிட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் போதிய வெளிச்சம் இல்லாததால் வல்லரசு உடலை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றனர். 



அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் மீண்டும் மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆற்றில் உள்ள புதர் சேற்றில் சிக்கிய வல்லரசின் உடலை சடலமாக மீட்டனர். 

பின்னர், உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தங்கமண் எடுக்க ஆற்றில் குதித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...