தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை வாலாங்குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட என்சிசி மாணவ மாணவிகள்..!!

மேலும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஓட்டமும் நடைபெற்றது. இது அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.



கோவை: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட 2TN என்சிசி மாணவ மாணவிகள் சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். 

பிரதமர் மோடியால் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 1-31ம் தேதி வரை பல்வேறு செயல்பாடுகள் இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 



அதன் ஒரு பகுதியாக, கோவை சுங்கம் வாலாங்குளம் பகுதியில் என்சிசி கமாண்டிங் ஆபிசர் கர்னல் சந்திரசேகர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா திட்டத்தின் நிகழ்வில் பங்கேற்று அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளை அகற்றினர். 



மேலும் தூய்மை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஓட்டமும் நடைபெற்றது. காலை 7 மணியளவில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு, அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் என அனைவரின் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இந்த நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள் சுபேதார் குல் வந் சிங், நாயக் சுபேதார் சக்தி, அவள்தான் ஜோஸ், தேசிய மாணவர் படை அலுவலர் சுதாகர், ஆல்பர்ட் அலெக்சாண்டர், ராகினி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...