காட்டெருமையால் சேதமோ, உயிரிழப்போ ஏற்படும் முன்பு உடனடியாக அந்த காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் சாலையில் சுற்றித்திரியும் காட்டெருமையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், வால்பாறையை அடுத்த சோலையாறு அணையிலிருந்து பவர் வுஸ் செல்லும் பிரதான சாலையில் மிகவும் வயதான காட்டெருமை ஒன்று கடந்த இரண்டு தினங்களாக சாலையில் படுத்து உள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், காட்டெருமை தங்களை தாக்கிவிடுமோ என்று மிகுந்த அச்சத்திலேயே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். தொடர்ந்து காட்டெருமை அப்பகுதியிலேயே இருப்பதால் பொதுமக்களிடையே மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
காட்டெருமை மிகுந்த வயதான காரணத்தினால் நோய்வாய்ப்பட்டு அப்பகுதியில் தங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காட்டெருமையால் சேதமோ, உயிரிழப்போ நடப்பதற்கு முன் வனத்துறையினர் உடனடியாக அந்த காட்டெருமைக்கு சிகிச்சை அளித்தது அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.