திருப்பூரில் 1,100-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100-கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1,100-கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்பு பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் சிலர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.

புகாரின் அடிப்படையில் முருகம்பாளையம் பகுதியில் நேற்று இரவு சோதனை ஈடுபட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பறக்கும் படை தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக் குமார், திருப்பூர் தெற்கு தனி வருவாய் ஆய்வாளர் ரஜா மற்றும் திருப்பூர் தெற்கு தனி வட்டாட்சியர் பறக்கும் படை தாசில்தார் சுந்தரம் ஆகியோர் முருகம்பாளையம் காது கேளாதோர் பள்ளி அருகே மாவு அரைத்துக் கொடுக்கப்படும் ஒரு கடையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.



மேலும் கடை நடத்தி வந்த கார்த்திக் (வயது 35) என்பவர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் அதே பகுதியில் உள்ள அவரது வீட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் ரேஷன் அரிசி 15 மூட்டை அதாவது சுமார் 1500 கிலோ அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள கார்த்திக் மீது உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...