4-மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்.!!

கோவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.


கோவை: கோவையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வரவுள்ள நிலையில் கோவை, நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி கலையரங்கம் ஒன்றில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.



தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் நான்கு மாவட்டத்தின் ஆட்சியர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்குத் தேர்தல் பயிற்சி, மற்றும் ஆயத்த பணிகள் குறித்த தெளிவுரை வழங்கப்பட்டது.



அக்கூட்டத்தில் பேசிய தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஒரு வாரக் காலமாகத் தேர்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், தேர்தலுக்காகப் பல முன்னெர்ப்பாடுகள் செய்ய வேண்டிய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மின்னணு எந்திரங்களைக் கொண்டு இந்த தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



சட்ட விதிகளைத் தெரிந்து கொண்டால் தேர்தல் நடத்துவது மிக எளிதாக இருக்கும் என்றும் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு இந்த தேர்தலை நடத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் உட்பட மாநகராட்சி ஆணையர், கோவை மாவட்ட மாநகர காவல் ஆணையாளர், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...