தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகிறது என்பது ஆச்சரியப்பட வைக்கின்றது - தமிழிசை சௌந்தரராஜன்.!!

ஆளுநர்கள் அரசிடம் இருந்து தகவல் கேட்டது சமீபத்தில் சர்ச்சையாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகின்றது என்பது ஆச்சரியப் படவைக்கின்றது என தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.


கோவை: கோவையில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய, குறிப்பாக இந்தியாவில் 100- கோடிக்கும் மேலாகத் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்க உறுதுணையாக இருந்த மருத்துவமனைகளின் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தனியார் மருத்துவமனைகளின் பிரதிநிதிகளுடன், தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்துரையாடி நன்றி தெரிவித்தார்.



கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கோடியே 4,99,873 தடுப்பூசி போட்டு இந்திய அரசு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.



உலக நாடுகள் எல்லாம் நம்மைப் பாராட்டுகின்றனர். இருப்பினும், 100-கோடி பேருக்கு தடுப்பூசி போட்டதைச் சிலர் அரசியல் விமர்சனமாகப் பேசுகின்றனர்.

கொரோனா காலகட்டத்தில், புதுச்சேரி நிர்வாகத்தின் பொறுப்பிலிருந்த காரணத்தால், மத்திய அரசு செய்த பணியும், கொரோனா முன்களபணியாளர்களின் சேவையும் தெரியவந்தது.

மேலும், கொரோனா இரண்டாம் அலையின் போது ஏற்பட்ட ஆக்ஸிஜன் பற்றாக்குறைக்கு உதவ, புதுச்சேரியிலிருந்து தமிழகத்திற்கு 30-சதவீத ஆக்ஸிஜன் தயாரிப்பை வழங்கினோம். சுமார், 40- சதவீத தமிழக மக்கள் புதுச்சேரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றனர். எந்த வித பாகுபாடு இல்லாமல், தமிழக மக்களுக்கு, புதுச்சேரியில் சிறப்பான சிகிச்சை மற்றும் உதவி செய்து தரப்பட்டது.

கொரோனா தொற்று மீண்டும் பரவ ஆரம்பிக்கின்றது. சீனாவில் பரவுகின்ற கொரோனா தமிழகத்திலும் பரவ வாய்ப்புண்டு. அதனால், பொது மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல், அனைத்து நோய்த்தடுப்பு விதிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

ஆளுநர்கள் அரசிடம் இருந்து தகவல் கேட்டது சமீபத்தில் சர்ச்சையாகப் பேசப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் எல்லாமே அரசியலாக்கப்படுகின்றது என்பது ஆச்சரியப் படவைக்கின்றது.

இந்த மாதம் 11-ஆம் தேதி டெல்லியில் ஆளுநர்களின் மாநாடு நடைபெறுகிறது. எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றது என்ற தகவலைப் பெற்று வந்து மத்திய அரசு கொடுக்கச் சொல்லி இருக்கின்றனர்.



இது எதார்த்தமாக இயல்பாக நடந்த விசயம். அதனால் தான், ஆளுநர்கள் மாநிலத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தகவல்களைச் சேகரித்துக் கலந்துரையாட இருக்கின்றோம். புதுச்சேரி, தெலுங்கானா மாநில அரசுகள் முழு ஒத்துழைப்புடன் தகவல்களைக் கொடுத்து வருகின்றனர் என்றார்.

புதுச்சேரியில் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து இருப்பதாகச் சொல்வது தவறான தகவல், புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகின்றது. மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது. புதுவையில் நடந்த சில சம்பவங்கள் குறித்தும் டி.ஜி.பியிடம் அறிக்கை கேட்டு இருக்கின்றேன்.

புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் சமூக நீதியுடன், பாதுகாப்பாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்காமல் இருக்கும் கட்சிகள், புதுவையில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் எனப் பேசி வருகின்றனர். திமுக ஆட்சி குறித்த கேள்விக்கு, நான் தெலுங்கானா ஆளுநர் என்பதால் யாருக்கும் ரிப்போர்ட் கார்ட் கொடுக்க முடியாது.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...