சாய்பாபாகாலனியில் இரும்பு கேட்டில் சிக்கிய நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்.!!

கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் சிக்கிக்கொண்ட நாயை தீயணைப்புத் துறையினர் 10-மணி நேரம் போராடி மீட்டனர்.


கோவை: கோவை சாய்பாபாகாலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் சிக்கிக்கொண்ட நாயை தீயணைப்புத் துறையினர் 10-மணி நேரம் போராடி மீட்டனர்.

கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வீட்டின் இரும்பு கேட்டின் வளையத்திற்குள் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அது எடுக்க முயன்று பார்த்து பலனின்றி அதிலே படுத்துக்கொண்டது.

இதுபற்றி அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் அந்த நாயின் தலைப்பகுதியில் விளக்கு எண்ணெய் ஊற்றினர். பின்னர் நாயின் வாயை கட்டினர். தொடர்ந்து கொஞ்சம், கொஞ்சமாக அந்த இரும்பு வளையத்திலிருந்து தெருநாயை விடுவித்தனர்.

சுமார் 10-மணி நேரம் வரை அந்த நாய் இரும்பு வளையத்திற்குள் சிக்கி இருந்ததால் மிகவும் சோர்வாகக் காணப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...