கோவை அரசு மருத்துவமனையில் குழந்தை உட்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல்.!!

கோவையில் டெங்குவிற்கு ஒரு குழந்தை உள்பட 4-பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80-பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


கோவை: கோவையில் குழந்தை உட்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. நகர் மற்றும் ஊரக பகுதிகளில் பாதிப்பு இருந்து வருகிறது. இதுதவிர மலேரியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவுக்குச் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதில் சிலருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறி தென்படுகிறது.

இதுபோன்ற நபர்களுக்கு டெங்கு டெஸ்ட் எடுக்கப்படுகிறது. இதில் காய்ச்சல் என கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த ஒரு குழந்தை உள்பட 4-பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் டெங்கு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவமனைக்கு காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகள் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 81-பேர் டெங்குவிற்கு ஒரு குழந்தை உள்பட 4-பேர், மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 80-பேர் வரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பருவமழை துவங்கியுள்ளதால், வைரஸ் காய்ச்சல், டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...