கோவையில் தந்தங்கள் வெட்டப்பட்ட ஆண் யானையின் இரண்டு தந்தங்கள் மீட்பு.!!

கோவையில் இறந்த ஆண் யானையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது தனிக்குழுவினர் கண்டறிந்து கைப்பற்றினர். யானைத் தந்தம் கைப்பற்றப்பட்ட பகுதி யானை இறந்த பகுதியிலிருந்து சுமார் 430-மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகும்.


கோவை: கோவையில் இறந்த ஆண் யானையின் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது தனிக்குழுவினர் கண்டறிந்து கைப்பற்றினர்.

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், வெள்ளப்பதி பிரிவு, பூண்டி தெற்கு சுற்று, கரியன் படுகை சராகப் பகுதியில் 23.10.2021 ம் தேதி போலாம்பட்டி பிளாக் 2 காப்புக்காட்டில் ரோந்து பணியின் போது இறந்த ஆண் யானை ஒன்று முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு இழுத்துச் சென்று இறந்த யானையின் எலும்புகள் மட்டும் அவ்விடத்தில் காணப்பட்டது.

யானை இறந்து சுமார் 40-நாட்கள் ஆகி இருக்கலாம் எனவும், இறந்த யானையின் வயது சுமார் 25-30 இருக்கலாம் எனவும், வனக்கால்நடை மருத்துவரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

யானையின் உடலில் தந்தங்கள் காணப்படவில்லை. ஆதலால் போளுவாம்பட்டி வனச்சரக வன உயிரின குற்ற வழக்கு 3/2021 பதிவு செய்யப்பட்டு கோவை வனக்கோட்ட உதவி வனப்பாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் தலைமையில் 5-தனிக் குழுக்கள் அமைத்து 5- தினங்கள் இரவு பகலாகத் தீவிர தேடும் பணி மற்றும் எதிரிகள் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.



இந்நிலையில், இன்று 28.10.2021-ம் தேதி சுமார் மதியம் 12-மணியளவில் தனிக்குழுவினர் அடர் வனப்பகுதிக்குள் முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு தந்தங்களை முட்புதரிலிருந்தது கண்டறிந்து கைப்பற்றினர்.

யானைத் தந்தம் கைப்பற்றப்பட்ட இப்பகுதி யானை இறந்த பகுதியிலிருந்து சுமார் 430-மீட்டர் தொலைவில் உள்ள பகுதியாகு என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...