குண்டும் குழியுமாக இருக்கும் சாலை: வாகன ஓட்டிகள் அவதி... பொதுமக்கள் கோரிக்கை.!!

சோலையாறு எஸ்டேட் பகுதியிலிருந்து பண்ணிமேடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், சாலையைச் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் 62-எஸ்டேட்கள் உள்ளன. வால்பாறையிலிருந்து அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் மூலமாகச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

வால்பாறையிலிருந்து சோலையாறு அணைக்கு செல்லும் பிரதான சாலையில் சோலையாறு, தாய்முடி, நல்லமுடி, முடிஸ், முத்துமுடி, தோனிமுடி, பண்ணிமேடு போன்ற எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலை சுமார் 15-கிலோ மீட்டர் சாலையை கடந்த ஆண்டு சீர் அமைப்பதற்காகச் சாலையை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பனி செய்தனர்.

பின்னர் ஆட்சி மாற்றத்தால் சாலையை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது.



சோலையாறு எஸ்டேட் பகுதியிலிருந்து பண்ணிமேடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.



108 ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட சிரமமான நிலையில் உள்ளது. மேலும் அரசு பேருந்து சாலையில் பழுதடைந்ததால் சில நேரங்களில் வராத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பகுதிக்கு வாகன செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.



மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தருவதாகத் தருவதற்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...