கோவையில், ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கி செல்போன், பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில், ரோந்து சென்ற போலீஸ்காரரை தாக்கி செல்போன், பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக வேலை செய்து வருபவர் ஸ்ரீராம். இவர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தங்கள் பகுதியில் சிலர் மது போதையில் அமர்ந்து இருந்தனர்.
அங்கு அருகில் சென்று பார்த்த போது மதுபோதையிலிருந்த நபர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அபுதாஹிர் சட்டவிரோதமான செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு ஏற்கனவே சிறைக்குச் சென்றவர் என்பது ஸ்ரீராமுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்ரீராம் அபுதாஹிர் மற்றும் அவருடன் இருந்தவர்களை செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றார். அப்பொழுது அபுதாஹீர் கான்ஸ்டபிள் ஸ்ரீராம் கையிலிருந்த செல்போனை பறித்ததோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதையடுத்து, ஸ்ரீராம் கண்ட்ரோல் ரூம்க்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்குக் காவல் துறையினர் விரைந்து வந்தனர். அவர்களிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீராம் போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் அவரை கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.