கோவையில் 50 ரூபாய் கடன் தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து..! போலீசார் விசாரணை

மீன் வாங்கும் போது 50 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். பாக்கி 50 ரூபாய் கேட்ட போது தகராறு முற்றிய நிலையில், கத்தியால் இப்ராகிமை குத்தியுள்ளார்.


கோவை: கோவையில் 50 ரூபாய் கடன் தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த உசைன் என்பவரின் மகன் இப்ராகிம். இவர் காட்டூர் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் சாரமேடு ஆசாத் நகர் பகுதியைச் சேர்ந்த சுலைமான் என்பவரின் மகன் பஷீர் என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீன் வாங்கி இருக்கிறார்.

அப்பொழுது, 50 ரூபாய் குறைவாக இப்ராகிம் பஷீர்டம் கொடுத்துள்ளார். அடுத்த முறை மீன் வாங்கும் போது 50 ரூபாய் பணத்தை தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், இப்ராஹிம் 50 ரூபாய் பணத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டின் முன்பு இப்ராகிம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பஷீர் பாக்கி 50 ரூபாய் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் தான் வைத்திருந்த கத்தியால் இப்ராகிமை குத்த முயன்றார்.

அப்பொழுது, தடுக்க முயன்ற போது இப்ராஹிம் கையில் கத்திக்குத்து விழுந்தது. கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது.

இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இப்ராஹிம்மை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து இப்ராகிம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...