புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் பேட்டரி திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஏ.டி.எம் மையத்தில் இருந்து பேட்டரிகள் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதிகளில் கரூர் வைசியா வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்படுகிறது.
இந்த ஏ.டி.எம் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது. இது தொடர்பாக கரூர் வைஸ்யா வங்கியின் அவிநாசி ரோடு கிளை மேலாளர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதேபோல், ராமநாதபுரம் பகுதியில் உள்ள கரூர் வைசியா வங்கியில் ஏ.டி.எம் மில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பேட்டரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடு போனது.
இது குறித்து முதுநிலை மேலாளர் கோகுல் கண்ணா ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து பேட்டரி திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.