வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்தன.
வால்பாறை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன.
கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 30-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலையும் 10- ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபியும் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கரடி மற்றும் காட்டெருமைகள் மான்கள் செந்நாய்கள் என ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.
இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன.
இதன் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்குத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் மாற்று இடத்தில் பணி செய்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்தன.
வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையை ஒட்டி தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமைகள் நின்றதால், சாலையில் சென்ற பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் ரசித்துப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.