கோவையில் 9-ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கல்.!!

கோவை மாவட்டத்தில் தற்போது வரை 17-ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9-ஆயிரம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 9-ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத் திட்டங்களை எளிதில் கொண்டு சேர்க்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்தியேக தேசிய அடையாள அட்டை ஆதாவது யு.டி.ஐ.டி. அட்டை கடந்த 2017-ம் ஆண்டு முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த அட்டை பெற இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு இந்த அட்டை வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத்திறனாளி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மாற்றுத்திறனாளிகளுக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம் 2017-ஜனவரி முதல் செயல்படுத்தப்படுகிறது. அறிவித்து ஓராண்டுக்குப் பிறகு, அடையாள அட்டையை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு அறிவித்தது. இதன்படி 21-வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் தற்போது வரை 17-ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் 9-ஆயிரம் பேருக்குத் தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு அட்டை வழங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...