கோவை தொண்டாமுத்தூரில் புதியதாக கட்டப்பட்ட அரசு கலை கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்...!

மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், மாணவர்கள் நன்கு படித்து முன்னேற வேண்டுமென எம்எல்ஏ எஸ்பி வேலுமணி வாழ்த்தினார்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே முத்திப்பாளையத்தில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அரசு கலைக் கல்லூரியை இன்று முதலமை‌ச்ச‌ர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.



இதனை தொடர்ந்து, தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். அப்போது கல்லூரி ஆசிரியர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.



அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட இந்த கல்லூரியை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்துள்ளார் என்றும் அரசியல் பாகுபாடின்றி கல்லூரி வளர வேண்டும் என்றார்.



மேலும் இப்பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை தற்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இங்கு பயிலும் மாணவர்கள் மென்மேலும் படித்து முன்னேற வேண்டுமென வாழ்த்தினார். மேலும் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் மற்றும் இருக்கைகள் தேவைப்படுவதாக ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளதாகவும் அதனை அரசின் கவனத்திற்கோ அல்லது சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்தோ பெற்று கூடிய விரைவில் அதனை செய்து தருவேன் என்றும் தெரிவித்தார். பின்னர், கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.



அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அரசு கல்லூரி இன்று முதல் திறக்கப்பட்டது அப்பகுதி மக்களிடமும், மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...