கோவை சுங்கம் பைபாஸ் அருகே குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகள் - நோய் தொற்று பரவும் அபாயம்..!!

பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அப்பகுதி மக்கள் மீண்டும் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை சுங்கம் பைபாஸ் ஸ்ரீ நகர் மற்றும் சிவராம் நகர் குடியிருப்பு பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றாததால் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி 74வது வார்டுக்கு உட்பட்ட சுங்கம் பைபாஸ் சாலை, ஸ்ரீ நகர், சிவராம் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு போதிய அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



மேலும், துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், ஆங்காங்கே சாலையில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், இப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவித்து வருகின்றனர்.



குப்பைகள் தேங்கியுள்ளதால், அந்த வழியாக மக்கள் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.



மேலும், இந்த பகுதியில் சரிவர குப்பை அகற்றப்படாததால், அங்கு விஷ பூச்சிகள், பாம்புகள் போன்றவற்றின் கூடாரமாக மாறி வருவதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் இது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மீண்டும் புகார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...