லாரியின் அடியில் மாட்டிக்கொண்ட ஓட்டுநரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவையில் லாரி தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சூலூர் வரப்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ் (29) தண்ணீர் லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் செலக்கரைச்சல் பகுதியில் தண்ணீர் வினியோகம் செய்வதற்காக லாரியில் சென்றார்.
அப்போது, லாரி சுல்தான் பேட்டை அருகே சென்றபோது திடீரென பிரகாஷின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் பிரகாஷ் லாரியின் அடியில் மாட்டிக்கொண்டு பலத்த காயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.