ராஜவாய்க்காலை தூர்வார கரும்புக்கடை மக்கள் மாநகராட்சி கமிஷனரிடம் மனு.!!

பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மழை பெய்யும் போது தண்ணீர் வீடுகளில் உள்ளேயும் வருகிறது என பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடந்தது. இதில், ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு அளித்தனர்.

கோவை கரும்புக்கடை பகுதி பொதுமக்கள் சார்பில், கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-

கரும்புக்கடை பகுதிக்குட்பட்ட 86-மற்றும் 75-வது வார்டு பகுதிகளில் ராஜவாய்க்கால் முறையாகத் தூர் வாரப்படவில்லை.



பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் மற்றும் இதர கழிவுகள் ராஜவாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. அதோடு மழை பெய்யும் போது தண்ணீர் வீடுகளில் உள்ளேயும் வருகிறது. உடனடியாக ராஜவாய்க்காலை தூர்வார வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பீளமேடு பகுதியை சேர்ந்த மதிமுக பகுதி கழக செயலாளர் வெள்ளிங்கிரி என்பவர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-

கோவை மாநகராட்சிக்கு 55-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள சாக்கடைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் உள்ளது. இதனால் வாட்டம் சரியாக இல்லாமல் மழை காலங்களில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீடுகளுக்குள்ளே செல்கிறது. மேலும் இப்பகுதியில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவது இல்லை. உடனடியாக மாநகராட்சி கமிஷனர் நேரடியாகத் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த முகாமில் தெற்கு மண்டல உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...