'மத்திய, மாநில அரசு வளர்ச்சி திட்டம்': மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு கூட்டத்தில் எம்.பி.நடராஜன் பங்கேற்பு.!!

அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாகச் செய்யப்பட வேண்டும். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எம்.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.


கோவை: அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாகச் செய்யப்பட வேண்டும். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எம்.பி.நடராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், கண்காணிப்புக்குழு தலைவரான எம்.பி., நடராஜன் தலைமையில் நடந்தது.

குடிநீர் வடிகால் வாரியம், நில அளவைத்துறை, மாவட்ட வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட தொழில் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, பொது சுகாதாரம், மின் உற்பத்தி பகிர்மானத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் பேசிய எம்.பி., நடராஜன், ''அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் உரிய மதிப்பீட்டின் அடிப்படையில் முறையாகச் செய்யப்பட வேண்டும். பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்,'' என்றார்.



கலெக்டர் சமீரன், பொள்ளாச்சி எம்.பி., சண்முக சுந்தரம், எம்.எல்.ஏ.,க்கள், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...