தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம்- பொள்ளாச்சியில் கயிறு வாரிய தலைவர் தகவல்.!!

இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கயிறு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: இந்திய அளவில் தென்னை உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது என பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கயிறு வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அரங்கில் தேசிய கயிறு வாரிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள தென்னை நார் உற்பத்தியாளர்கள் தொழில் முனைவோர் மற்றும் கயிறு வாரிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கயிறு வாரிய தலைவர் குப்பு ராமு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் 2020-21 ஆண்டில் 3,780-கோடி ரூபாய்க்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும், உள்நாட்டு வர்த்தகம் ரூ.12,000-கோடிக்கும் நடைபெற்றுள்ளது. 2025-ல் தென்னை நார் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி 10,000-கோடிக்கும், உள்நாட்டு வர்த்தகம் 25,000-கோடிக்கும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் புதிதாக 2-லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும். கயிறு பொருட்கள் இயற்கை சார்ந்த பொருட்கள். கயிற்றில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து தொழில் முனைவோர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.



ஜியோ டெக்ஸ்டைல்ஸ் எனப்படும் கயிறு பொருட்களைக் கொண்டு சாலை அமைத்தல் எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து கொள்கை அளவில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அகில இந்திய அளவில் சாலை அமைப்பதில் 7-சதவீதம் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (கயிறு பொருட்களை) பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய அளவில் கயிறு பொருட்கள் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, என்றும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...