வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்..!

மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள் பேருந்தில் பயணிப்பவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.



வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், வால்பாறை தபால் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கி வழியாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்று விளக்கம் அளித்தனர்.



தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வால்பாறை நிலைய ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார், வேல்மணி, பாலமுரளி, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...