கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது..!

கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


கோவை: கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22). இவர் நேற்று காலை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தார்.

அப்போது, அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி குமார் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

பின்னர், இதுகுறித்து ஆகாஷ் குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்கிற சரவணன் (34) என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...