கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் முழுக் கொள்ளளவை எட்டியுள்ள 14 குளங்கள்..!!

நொய்யல் வழித்தடத்தில் உள்ள குறிச்சி, சிங்காநல்லூர், உக்கடம், கோலரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, உள்ளிட்ட 14 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், நொய்யல் வழித்தடத்தில் உள்ள 14 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையின் இறுதி கட்டத்தில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மழைப்பொழிவு இருந்தது. இதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து நொய்யல் வழித்தடத்தில் உள்ள, 25 குளங்களுக்கு நீரை திருப்பி விடும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

இதனால், நொய்யல் வழித்தடத்தில் உள்ள குறிச்சி, சிங்காநல்லூர், உக்கடம், கோலரம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி செல்வசிந்தாமணி உள்ளிட்ட 14 குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மற்ற குளங்களும் விரைவில் நிரம்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...