ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!

மேலும், தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


கோவை: ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் 200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தமிழ்நாடு கிராம ஊராட்சிக் குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மைக் காவலர்கள் சங்கம் சார்பில் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு:-

ஊதிய உயர்வு, வேலை நிரந்தரம், பணிக்கொடை ஓய்வூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவை வேண்டும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி கல்வித்தகுதிக்கேற்ப பதவி உயர்வு, பணிகாலத்தில் இறந்தவர்களின் வாரிசுக்கு வேலை, குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தனர்.



மேலும், அரசு அறிவித்த எந்த சலுகைகளும் தங்களுக்கு சரிவர வந்து சேர்வதில்லை என்று குற்றம்சாட்டினர். ஊதியக்குழு உத்தரவு வெளியிட்டு நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை என்றனர்.



மேலும், இது குறித்து புகார்கள் தொடர்ந்து கொடுத்த நிலையிலும், எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று மாநிலம் தழுவிய மாவட்ட அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...