கோவையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை..!

போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



கோவை: கோவையில் பெட்ரோல், டீசல் விலை100 ரூபாயை தாண்டியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய தபெதிகவினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்து செல்லும் நிலையில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் போராட்டம் நடத்தப்படும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் அறிவித்து இருந்தது.



இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக குப்புசாமி நாயுடு மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இருந்த பிரதமர் மோடி படம் அகற்றப்பட்டது.



எனினும் பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் வந்த தபெதிகவினர் பெட்ரோல் பங்க் முன்பாக பிரதமர் மோடி படத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் பிரதமர் மோடியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



இதனை தொடர்ந்து பேட்டியளித்த தபெதிக அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பதால் மக்கள்படும் வேதனையை பிரதமரின் புகைப்படத்திற்கு மலர் தூவி காட்டியிருக்கின்றோம் என தெரிவித்தார்.

பெட்ரோல் விலையை உயர்வதால் மக்களுக்கு ஏற்படும் வேதனையை வெளிப்படுத்தும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.



இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...