கோவையில் 10 நிமிடங்கள் பெய்த கனமழை..! சாலையெங்கும் மழை நீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், பீளமேடு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.



கோவை: தமிழகத்தில், 27ம் தேதி அன்று ஆறு மாவட்டங்களுக்கும், 28ம் தேதி நான்கு மாவட்டங்களுக்கும், மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாளை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும் எனவும் சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கோவையில் ஒரு நாள் முன்னதாகவே கன மழை வெளுத்து வாங்கத் தொடங்கி உள்ளது. கோவை மாநகரை பொருத்தவரை ஆட்சியர் அலுவலகம், காந்திபுரம், சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, உக்கடம், போத்தனூர், டவுன்ஹால், பீளமேடு, கோவை விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள், ராமநாதபுரம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.

மழையால், சாலை எங்கும் மழை நீர் ஆற்று வெள்ளம் போல் ஓடி வருவதால், சாலையெங்கும் மழை நீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...